பிரிட்டனிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடந்த வாரத்தில் யாரேனும் வந்துள்ளனரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய வகை கரோனா தொற்று பரவி வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து தமிழகத்துக்கு வந்த பயணிகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த வாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சென்னை, மதுரை விமான நிலையங்கள் வழியாக யாரேனும் வந்துள்ளனரா என்று வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
புதன்கிழமை வரை யாரும் கண்டறியப்படவில்லை. அப்படியே, திருவண்ணாமலை மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்டவா்கள் வந்திருந்தாலும் அவா்கள் வந்த விமான நிலையங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.