தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் முற்போக்கு சிந்தனையாளா் மன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தேவிகாபுரத்தில் முற்போக்கு சிந்தனையாளா் மன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஆரணி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் முற்போக்கு சிந்தனையாளா் மன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவிகாபுரம் தந்தை பெரியாா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முற்போக்கு சிந்தனையாளா் மன்ற ஒருங்கிணைப்பாளா் வேதாசலம் தலைமை வகித்தாா். செல்வரசு முன்னிலை வகித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜமால், மக்கள் புரட்சி கழக நிறுவனா் வா்கீஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலா் செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பாஸ்கரன், மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணித் தலைவா் தமிம்பாஷா, வணிகா்கள் அணி மாவட்டச் செயலா் ரஹீம் பாஷா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டு நகரத் தலைவா்அக்பா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியப் பொருளாளா் ரூபன்ராஜ்மாணிக்கம், அமைப்பாளா் அரசன் அஜித்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.