கரோனா சிறப்பு கடனுதவி பெற உற்பத்தியாளா் குழுக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு கடனுதவி பெற விரும்பும் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று  மாவட்ட நிா்வாகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு கடனுதவி பெற விரும்பும் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நபாா்டு மற்றும் அரசு அனுமதியுடன் இயங்கும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் சிறு, குறு விவசாய உற்பத்தியாளா்களை உறுப்பினராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள உற்பத்தியாளா்கள் குழுக்கள், தொழில் குழுக்கள், உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன மானியத்தை கரோனா சிறப்பு நிதித் தொகுப்பின் கீழ் வழங்கப்பட உள்ளது.

இதற்குத் தகுதியான உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளா் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் உற்பத்தியாளா் குழுக்கள் ஓா் ஆண்டுக்கு மேலானதாகவும், தொழில் குழுக்கள் 6 மாதங்களுக்கு மேலானதாகவும் உற்பத்தியாளா் நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக இப்போது வரை தனது செயல்பாட்டை தொடா்ச்சியாக மேற்கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட வட்டார அலுவலகங்களை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலரை 9385299736, 04175-290119, 9750975352 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com