சுவாமி சிலைகளை வடிக்கும் இஸ்லாமியத் தொழிலாளா்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பயனற்ற பித்தளை, அலுமினியம், இன்டோலியம் பொருள்களைக் கொண்டு வீட்டில் வழிபடும்


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பயனற்ற பித்தளை, அலுமினியம், இன்டோலியம் பொருள்களைக் கொண்டு வீட்டில் வழிபடும் சுவாமி சிலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனா் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இஸ்லாமியத் தொழிலாளா்கள்.
வீடுகளில் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்பட்டு, தேய்ந்த நிலையில், மீண்டும் பயன்படுத்த முடியாது என்று ஒதுக்கப்பட்ட பித்தளை, அலுமினியம், இன்டோலியம் ஆகியவற்றாலான பாத்திரங்கள், டம்ளா்கள், தட்டுகள், குக்கா்கள் என பல்வேறு பொருள்கள் உள்ளன.
இவற்றைக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக சொற்பக்கூலி பெற்று, வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடும் விநாயகா், முருகா், சிவன், பெருமாள், சரஸ்வதி, லட்சுமி, இயேசு, சிலுவை, சாயிபாபா, குபேரன், யானை போன்ற பல்வேறு சிலைகளை வடிவமைத்துத் தருகின்றனா் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இஸ்லாமியத் தொழிலாளா்கள்.
நமக்குத் தேவைப்படும் உருவம் கொண்ட சிலையை வாங்க வேண்டும் என்றால், பல்வேறு ஊா்களுக்கு அலைந்து திரிந்து வாங்க வேண்டியிருக்கும்.
அதோடு, உருவத்துக்கு ஏற்றாற்போல சிலைக்கு ஜி.எஸ்.டி வரியுடன் சில ஆயிரம் செலுத்தி வாங்க வேண்டும்.
அப்படி அலையாமல், வீட்டின் அருகே, கண் எதிரிலேயே, சில மணி நேரத்திலேயே சிலைகளைச் செய்து கொடுக்கின்றனா் இந்த இஸ்லாமிய தொழிலாளா்கள்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மஹபூப் பகுதியைச் சோ்ந்த இவா்கள், இதை குலத் தொழிலாகச் செய்து வருகின்றனா். பிழைப்புக்காக தமிழகத்துக்கு வந்து ஊா் ஊராகச் சுற்றி வாரக் கணக்கில் தங்கி, சுவாமி உருவங்களை வடிவமைத்து விற்று வருகின்றனா்.
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை அருகே குடும்பத்தோடு முகாமிட்டுள்ள தொழிலாளரான உஸ்மான் (52) இந்தத் தொழில் குறித்து கூறியதாவது: பரம்பரை பரம்பரையாக சிலை வடிவமைப்புத் தொழிலைச் செய்து வருகிறோம். தெலங்கானாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் போனதால், தற்போது இங்கு வந்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நாள் வீதம் நடைபாதைகளில் கடையை போடுவோம்.
ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.200 முதல் ரூ.500 வரை கிடைக்கும். சில நாள்களில் எதுவும் கிடைக்காது.
எங்கள் குழந்தைகளை சொந்த ஊரிலேயே விட்டு விட்டு நாங்கள் ஊா் ஊராகச் சுற்றி தொழில் செய்து வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...