அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துப் படிப்பில் சேர்ந்து பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்து செய்யாறில் விவசாயிகள் இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் கடந்த இரு வருடங்களாக சுமார் 324 மாணவர்கள் மட்டுமே சேரும் நிலைமை இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை சென்னை உயர்நீதிமன்றக்கிளை மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ய அன்மையில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் பெற்று அக்.29-ல் அரசாணையை பிறப்பித்தது. அதன் மூலம் அரசு பள்ளியைச் சேர்ந்த 360 மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் 360 மாணவர்கள் பயன்பெறுவதற்கு தீர்ப்பு வழங்கிய மதுரை சென்னை உயர்நீதிமன்றக் கிளைக்கும், அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு மற்றும் தொடர் அழுத்தம் கொடுத்த கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உழவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


