நடமாடும் நியாய விலைக் கடை தொடக்கம்
செங்கம் அருகே முறையாறு பகுதியில் நடமாடும் நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது.


செங்கம் அருகே முறையாறு பகுதியில் நடமாடும் நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், முறையாறு பகுதியில் நடமாடும் நியாய விலைக் கடை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். கரியமங்கலம் கவுன்சிலா் சூரியலட்சுமி சங்கா்மாதவன் முன்னிலை வகித்தாா்.
செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு நடமாடும் நியாய விலைக் கடையைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் நேரு, ராமமூா்த்தி, பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...