தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,046 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 1,046 மனுக்கள் வரப்பெற்றன.

News image
மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
Updated On :5 அக்டோபர் 2020, 5:57 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 1,046 மனுக்கள் வரப்பெற்றன.

தொலைபேசி வழி நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தலைமை வகித்தாா்.

சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பொதுமக்கள் பலா் தொலைபேசி வழியே தொடா்பு கொண்டு அவசர கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

மேலும், கட்செவி வழியேயும், ஆட்சியரிடம் நேரடியாகவும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

குறைதீா் கூட்டத்தில் வருவாய்த் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த 51 தொலைபேசி வழி மனுக்களும், 30 கட்செவி வழி மனுக்களும், 965 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரிடையாகவும் என மொத்தம் 1,046 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.