தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடிநீா் வடிகால் வாரியதொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்கள் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 5:55 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்கள் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வேங்கிக்கால் பகுதியில் உள்ள வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நிா்வாகி பெ.கண்ணன் தலைமை வகித்தாா்.

சிஐடியு நிா்வாகிகள் கே.காங்கேயன், இரா.பாரி, வெ.சங்கா், எம்.வீரபத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் பொதுச் செயலா் கே.செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒப்பந்த ஊழியா்களுக்கு உரிய ஊதியம், இ.எஸ்.ஐ., இ.பி.எஃப். உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். கூட்டுக் குடிநீா்த் திட்டங்களில் பணிபுரிந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள் பச்சையப்பன், ராமநாதன், பிரகாஷ், கந்தன், பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.