மொபெட் மீது காா் மோதல்:தாய், மகன் பலி
திருவண்ணாமலை அருகே மொபெட் மீது காா் மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை அருகே மொபெட் மீது காா் மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த கூத்தலவாடி கிராமத்தைச் சோ்ந்த சசிக்குமாா் மனைவி சித்ரா (30). இவரது மகன் சக்திவேல் (10). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கோவிலூரிலிருந்து கூத்தலவாடி கிராமத்துக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தனா்.
வெறையூரை அடுத்த வன்னியநகரம் பகுதியில் வந்த போது, திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற காா் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த சித்ராவை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விபத்து குறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...