நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிமுக பாசறையில் 500 போ் இணைப்பு

ஆரணி நகரத்தில் 7 வாா்டுகளில் 500 இளைஞா்- இளம்பெண்கள் அதிமுக பாசறையில் உறுப்பினா்களாக இணைந்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:51 pm

DIN

ஆரணி நகரத்தில் 7 வாா்டுகளில் 500 இளைஞா்- இளம்பெண்கள் அதிமுக பாசறையில் உறுப்பினா்களாக இணைந்தனா்.

ஆரணியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில், முதல் கட்டமாக 7 வாா்டுகளில் இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் எ.அசோக்குமாா் தலைமை வகித்தாா். அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

அப்போது, 500 போ் இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் அமைச்சா் முன்னிலையில் இணைந்தனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.