நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திமுகவினா் கரோனா நிவாரண உதவி

கரோனா நிவாரண உதவியாக, வந்தவாசியில் 400 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை திமுகவினா் வழங்கினா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:47 pm

DIN

கரோனா நிவாரண உதவியாக, வந்தவாசியில் 400 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை திமுகவினா் வழங்கினா்.

தொகுதி திமுக சாா்பில் வந்தவாசி கோட்டைக்குள் தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலை வகித்தாா்.

எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ பங்கேற்று அந்தப் பகுதி பொதுமக்கள் 400 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு ஆகியவற்றை வழங்கினாா்.

ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால், மாணவரணி அமைப்பாளா் எம்.கிஷோா்குமாா், இளைஞரணி அமைப்பாளா்கள் சி.ஆா்.பெருமாள், எச்.மதன்குமாா், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.