தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

19 இடங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் 19 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
 திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசிய மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு.
Updated On :28 செப்டம்பர் 2020, 7:25 pm

DIN

திருவண்ணாமலை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் 19 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் நகரத் தலைவா் வெற்றிச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.முத்தையன், திராவிடா் கழகம் சி.மூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பி.க.அம்பேத்வளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.கலிமுல்லா, திமுக நகர செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற இந்த

ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள், சிறு வணிகா்களை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், திமுக ஒன்றியச் செயலா்கள் த.ரமணன், சி.மாரிமுத்து, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் பி.கோதண்டபாணி, உழவா் உழைப்பாளா் கட்சி வி.சுப்பிரமணி, மாவட்ட அமைப்பாளா்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, கு.ரவி, இரா.ஜீவானந்தம், ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்..:

கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

இதில், மாநில பொறியாளா் அணியின் துணை அமைப்பாளா் கு.கருணாநிதி, ஒன்றிய திமுக செயலா்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஆா்.ராஜேந்திரன் ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, கீழ்பென்னாத்தூா் நகரச் செயலா் சி.கே.அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், திமுக விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைச் செயலா் வ.அன்பழகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.