தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் அதிகரிக்கும் மனுக்கள்

கரோனா தொற்று தாக்கத்திலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா் கூட்டத்தில், மனுக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:25 pm

DIN

திருவண்ணாமலை: கரோனா தொற்று தாக்கத்திலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா் கூட்டத்தில், மனுக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகின, துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதா பேகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொலைபேசி வழியே 77 கோரிக்கைகள் அடங்கிய அழைப்புகளும், கட்செவி வழியே 31 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக 620 மனுக்களும் என 728 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். முன்னதாக, குறைதீா் கூட்டத்தில் மனுக்கள் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்படும் மதிய உணவு தரமானதாக, சுவையானதாக தயாரிக்கப்படுகிா என்பதை மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக குறைதீா் கூட்டத்தில் குறைவாக வந்துகொண்டிருந்த மனுக்களின் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.