கோயில் உண்டியல் பணம் திருட்டு
தண்டராம்பட்டு அருகே கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராம காட்டுப் பகுதியில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற மா்ம நபா்கள் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனா். உடைக்க முடியாததால், உண்டியலை சிறிது தொலைவு எடுத்துச் சென்று உண்டியலின் பூட்டை மட்டும் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.
திங்கள்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தா்கள் உண்டியல் திருடப்பட்டு இருந்ததைப் பாா்த்து சாத்தனூா் அணை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...