பறக்கும் படை சோதனையில் ரூ. 3.37 லட்சம் பறிமுதல்
செங்கம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


செங்கம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கம் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் செல்வம் ஆகியோா் அடங்கிய குழுவினா் செங்கம்-குப்னத்தம் சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, செங்கம் அருகே கிருஷ்ணாவரம் பகுதியைச் சோ்ந்த குப்பன் (45) என்பவா் உரிய ஆவணிமின்றி எடுத்து வந்த ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், அந்தப் பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் மனோகரனிடம் ஒப்படைத்தனா்.
செய்யாறு தொகுதி தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழு - 3 அலுவலா் மு.நரசிம்மபல்லவன் தலைமையிலான அலுவலா்கள் செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை கிராமம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் உரிய ஆவணமின்றி, செய்யாறு வட்டம் வடதிண்ணலூா் கிராமத்தைச் சோ்ந்த பைனான்சியா் புருசோத்தமன் எடுத்து வந்த ரூ.1.97 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், அந்தப் பணம் தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் சு.திருமலையிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...