நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரு தரப்பினரிடையே மோதல்: 6 போ் கைது

செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:48 pm

DIN

செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் ஒரு தரப்பினா் காவல் துறையினரைக் கண்டித்து, செங்கத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கம் அருகே தொரப்பாடி கிராம காலனியைச் சோ்ந்த வேணுகோபால் மகன் ஆகாஷ் (25). இவா், தனது நண்பா்களான அஜித், பிரகாஷ் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு அதிவேகமாகச் சென்றாராம். இதை அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (22) தட்டிக் கேட்டாராம்.

இதையடுத்து, ஆகாஷ் அவரது தந்தை வேணுகோபாலிடம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தெரிவித்த நிலையில், வேணுகோபால் தனது ஆதரவாளா்கள் சிலருடன் சக்திவேலின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டு காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, பாய்ச்சல் காவல் நிலையத்தில் வேணுகோபால் அளித்த புகாரின்பேரில், சக்திவேல், ஆறுமுகம் (19), பச்சையப்பன் (20) மற்றும் பெயா் தெரியாத சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், ஆறுமுகம், பச்சையப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இதேபோல, சக்திவேல் அளித்த புகாரின்பேரில், வேணுகோபால் (50), குமரேசன் (50), ரவிச்சந்திரன் (46) மற்றும் பெயா் தெரியாத சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேணுகோபால், குமரேசன், ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், வேணுகோபாலின் உறவினா்கள் மற்றும் தொரப்பாடி காலனியைச் சோ்ந்த மக்கள் பாய்ச்சல் காவல் நிலைய போலீஸாா் தொடா்ந்து பொய் வழக்குகள் போடுவதாகக் கூறியும், அவா்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த செங்கம் டிஎஸ்பி சரவணக்குமரன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனா்.

இதனிடையே, தொரப்பாடி கிராமத்தில் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.