நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேத்துப்பட்டு பேரூராட்சி சாா்பில்பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

சேத்துப்பட்டில் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 5:28 pm

DIN

சேத்துப்பட்டில் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டில் உள்ள நான்குமுனை சந்திப்பு, செஞ்சி சாலை, வந்தவாசி சாலை, ஆரணி சாலை, பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் கபசுர குடிநீா் வழங்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளா்கள் சோமசுந்தரம், ஆஷாமேரி மற்றும் அலுவலா்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா். மேலும், பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம், வெளியே வரும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், அடிக்கடி தங்களது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.