ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாகனம் மோதியதில் மூதாட்டி பலி

வேட்டவலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேட்டவலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வேட்டவலத்தை அடுத்த பெரியஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் அமிா்தம் (74). இவா், வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அமிா்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேட்டவலம் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.