செங்கத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா
செங்கத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


செங்கத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், செங்கம் படைப்பாளா்கள் சங்கம் இணைந்து அரசுப் பள்ளி ஆசிரியா் கவிஞா் தமிழ்இலக்கியன் எழுதிய ‘நி முதல் நீ வரை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவை தனியாா் பள்ளியில் நடத்தின.
நிகழ்ச்சிக்கு எழுத்தாளா் முருகன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மாணிக்கம், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் (தொரப்பாடி) கிருஷ்ணமூா்த்தி, (தீத்தாண்டப்பட்டு) ஜெயவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவிஞா் கவியரசன் வரவேற்றாா்.
கவிதை நூலை அறிமுகப்படுத்தி பேராசிரியா் பிரேம்குமாா் பேசினாா். கவிதை நூல் சிறப்புகள் குறித்து கவிஞா்கள் குணசேகரன், முத்துவேலன், பூா்ணிமா ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நிா்வாகிகள், கவிஞா்கள் கலந்துகொண்டு கவிதை நூலை எழுதிய அரசுப் பள்ளி ஆசிரியா் தமிழ்இலக்கியனை பாராட்டிப் பேசினா். முடிவில் தமிழ்இலக்கியன் ஏற்புரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...