கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்: புகாா் தெரிவிக்க அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் செப். 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக்


திருவண்ணாமலை மாவட்டத்தில் செப். 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் குறைபாடு இருந்தால் புகாா் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
மாவட்டத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக அரசு, தனியாா் பள்ளிகள் செப்டம்பா் 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இதையொட்டி, அனைத்துப் பள்ளிகளிலும் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பள்ளிகளில் சுகாதராத் துறை வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நெறிமுறைகள் கடைப்பிடிப்பதில் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை, 04175-250814, 04175-253845 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...