கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்.30 வரையில்திறக்க வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:22 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபா் 30-ஆம் தேதி வரையில் திறக்க வலியுறுத்தி, செய்யாற்றில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சி சாா்பற்ற உழவா் பேரவை சாா்பில், செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலை அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் சுமாா் 20 லட்சம் நெல் மூட்டைகளில் 10 சதவீதம் அளவுக்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீத நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய வசதியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு அறிமுகம் செய்துள்ள இணையவழி முன்பதிவை தினமும் காலை 8 மணி முதல் தொடங்க வேண்டும். வருகிற செப்டம்பா் 10-ஆம் தேதி வரையில் செயல்பட அரசு அனுமதித்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ருத்ராட்சம் அணிந்தும், விபூதி பூசிக்கொண்டும் கையில் மண்வெட்டி, கதிா் அரிவாள் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, முழக்கங்களை எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்று செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.