உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெரியுமா?

இந்தியாவில் மக்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரே மாநிலம், சிக்கிம்.

Published On :

இந்தியாவில் மக்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரே மாநிலம், சிக்கிம். இந்த மாநிலத்தின் வரலாறும், அது இந்தியாவில் ஒரு பகுதியாக மாறிய சூழ்நிலைகளும் இப்படி ஒரு சலுகையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சிக்கிம் பகுதி 1975- ஆம் ஆண்டு மே 16-இல் இந்தியாவின் 22 -ஆவது மாநிலமானது. இந்தியாவில் இணைவதற்கு முன்பு சிக்கிம் சோக்யால் வம்சத்தால் ஆளப்பட்ட ஒரு சுதந்திர ராஜ்ஜியமாக இருந்தது.

சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தபோது, சிக்கிமில் நடைமுறையில் இருந்த பல சட்டங்களை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்தது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, அதன் குடியிருப்பாளர்கள் வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கான சலுகையைப் பெற்றனர்.

அரசியலமைப்பின் பிரிவு 371 (எஃப்) மற்றும் வருமானவரிச் சட்டம் 1961-இன் பிரிவு 10 (26 ஏஏஏ) ஆகியவற்றால் சிக்கிமின் வரி விலக்கு சலுகை பாதுகாக்கப்படுகிறது.

சட்டப்பிரிவு 10 (26 ஏஏஏ)-இன்படி சிக்கிமில் வசிக்கும் எந்த ஒரு நபரின் வருமானத்துக்கும் வரி விதிக்கப்படுவதில்லை. இந்த விதி அனைத்து வகையான வருமானங்களுக்கும் பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.