இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மக்கள் நாடாளுமன்றம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், நாடாளுமன்றத் தலைவராக ராஜா செயல்பட்டாா். விவசாய அமைச்சராக முத்துகுமாா் பங்கேற்று விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்ட மசோதாக்கள் குறித்து விளக்கிப் பேசினாா். செங்கம் ஒன்றியச் செயலா் சா்தாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மாதேஸ்வரன், நிா்வாகிகள் வஜீா்பாஷா, ஏழுமலை, பச்சையப்பன் ஆகியோா் நாடாளுமன்ற உறுப்பினா்களாக பங்கேற்று விவாதத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...