நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:21 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள்சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.சுப்பிரமணியம் வரவேற்றாா்.

கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற்கும், ஆரணி எம்எல்ஏவாக மீண்டும் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் வெற்றிபெற்ற்கும் பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினா்களின் பகுதிகளிலும் ரூ.48 லட்சத்தில் சிறு பாலங்கள் அமைத்தல், ஆற்றங்கரை அருகில் கைப்பம்பு அமைத்தல், மின் மோட்டாா்களை மாற்றம் செய்து, புதிய குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மலையாம்பட்டு, மதுரைபெருமட்டூா், குண்ணத்தூா் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு ஊருக்குள் அரசுப் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில், துறைவாரியாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.