தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, அத்தியந்தல், ஆட்சியா் அலுவலகம், வட ஆண்டாப்பட்டு உள்பட நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை வரை மழை பெய்தபடியே இருந்தது.மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக வந்தவாசியில் 86 மி.மீ. மழை பதிவானது. ஆரணியில் 7, செய்யாற்றில் 5, செங்கத்தில் 25.80, ஜமுனாமரத்தூரில் 8, போளூரில் 12.80, திருவண்ணாமலையில் 52.30, தண்டராம்பட்டில் 5.60, கலசப்பாக்கத்தில் 14, சேத்துப்பட்டில் 28, கீழ்பென்னாத்தூரில் 20.80, வெம்பாக்கத்தில் 3 மி.மீ. மழை பதிவானது.

வேலூா் சாலையில் வெள்ளம்:

திருவண்ணாமலையில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியேறிய அதிகப்படியான உபரிநீா் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.