நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அவதி

செங்கம் பகுதியில் முக்கிய சாலைகளில் கொட்டப்படும் காய், கனி கழிவுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றன.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 5:39 pm

DIN

செங்கம் பகுதியில் முக்கிய சாலைகளில் கொட்டப்படும் காய், கனி கழிவுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றன.

செங்கம் தோ்வுநிலை பேரூராட்சிக்கு உள்பட்ட

நீதிமன்றம் செல்லும் சாலையில் காய், கனி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியைக் கடக்கும்போது துா்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை மாடுகள் கலைத்து விடும்போது அதிகளவில் நாற்றம் வீசுகிறது. மாடுகள் கழிவுகளை கலைப்பதுடன் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. அப்போது, வாகனங்களில் மாடுகள் மோதி விபத்துகளும் நிகழ்கின்றன.

இரு சக்கர வாகனங்கள் கிழே விழுந்து வாகன ஓட்டிகளுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது.

இதனால், பேரூராட்சி செயல் அலுவலா் நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற சாலையில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.