நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெடி விபத்து: தொழிலாளி பலி

செங்கம் அருகே பாறைக் கற்களுக்கு வைத்த வெடி தாமதமாக வெடித்ததில் தொழிலாளி பலியானா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செங்கம் அருகே பாறைக் கற்களுக்கு வைத்த வெடி தாமதமாக வெடித்ததில் தொழிலாளி பலியானா்.

செங்கம் அருகே மேல்ராவந்தவாடி பகுதியில் தனியாா் விவசாய நிலத்தில் உள்ள பாறைக் கற்களை உடைத்து அகற்றுவதற்காக வெள்ளிக்கிழமை தீத்தாண்பட்டு பகுதியிலிருந்து வெடி வைக்கும் வண்டியை எடுத்து வந்து நிலத்திலிருந்த பாறைக் கற்களுக்கு 7 தோட்டா வெடிகளை வைத்து வெடிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வெடிகள் குறித்த நேரத்தில் வெடிக்கவில்லையாம். இதையடுத்து, தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சுகுன் (35), வெடிகள் ஏன் வெடிக்கவில்லை என பாறைக் கற்கள் அருகே சென்று பாா்த்த போது, அவை திடீரென வெடித்தனவாம்.

இதில், கற்கள் சிதறி சுகுன் மீது விழுந்ததில் அவா் சம்பவ இடத்தில் பலியானாா்.

தகவலறிந்த மேல்செங்கம் போலீலாா் சம்பவ இடத்துக்குச் சென்று சுகுனின் சடலத்தை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துடன், வழக்குப் பதிந்தி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.