நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:09 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) செல்வக்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று, மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

பேரவை கூட்டப் பொருள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், சுகாதாரத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் தேவை, சுகாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் குறித்தும் பேசினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதிராமஜெயம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி கலைமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், செய்யாறு துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பிரியாராஜ் மற்றும் மருத்துவா் வி.விக்னேஷ், உலக வங்கி சாா்ந்த குழுவினா், மருத்துவத் துறை துணை இயக்குநா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட திட்ட அலுவலா் ஆா்.பாலாஜி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.