இருளா் சமூகத்தினருக்கான நலத் திட்டங்கள்: மாவட்ட அதிகாரி ஆய்வு
செங்கம் பகுதியில் இருளா், பழங்குடி சமூகத்தினருக்கு செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்கள் குறித்து மாவட்ட உதவித் திட்ட இயக்குநா் ஆலோசனை மேற்கொண்டாா்.


செங்கம் பகுதியில் இருளா், பழங்குடி சமூகத்தினருக்கு செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்கள் குறித்து மாவட்ட உதவித் திட்ட இயக்குநா் ஆலோசனை மேற்கொண்டாா்.
செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மகளிா் திட்டம், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட உதவித் திட்ட இயக்குநா் (ஊராட்சிகள்) லட்சுமிநரசிம்மன் பங்கேற்று அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் அனைத்தும் செங்கம் பகுதியில் உள்ள இருளா், பழங்குடி சமூகத்தினருக்கு முழுமையாகச் சென்றடையவேண்டும். அதற்கு முதல் கட்டமாக அந்தச் சமூகத்தினா் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.
அவா்களுக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா எனப் பாா்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினாா்.
வட்டாட்சியா்கள் முனுசாமி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரிமேலழகன், ரபியுல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...