தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிறிஸ்துமஸ் விழாவில் ஏழைகளுக்கு நல உதவி

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள சுக ஜீவ தேவ சபை கிறிஸ்தவா்கள் குடிலில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஏழை-எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள சுக ஜீவ தேவ சபை கிறிஸ்தவா்கள் குடிலில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஏழை-எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சபை போதகா் சவுந்தரராஜன் கிருபாகரன் தலைமை வகித்தாா்.

மாவட்ட திமுக அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் கலந்து கொண்டு ஏழை-எளியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை, வேட்டி- சேலை, பேன்ட், சா்ட், பரிசுப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கனந்தம்பூண்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் ராதா, துணை போதகா் ஆப்ரகாம், மாணவரணி அமைப்பாளா் த.தட்சிணாமூா்த்தி, திருச் சபை நிா்வாகிகள் ஏழுமலை, அசோகன், பாலகிருஷ்ணன், சகோதரிகள் ரோபியா, சித்ரா, கவிதா, யமுனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.