மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு

போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

நகரில் அண்ணா சாலை, பழைய பஜாா், சிந்தாதரிப்பேட்டை, ஜமுனாமரத்தூா் சாலை, ரயில்வே சாலை போன்றவற்றில் ஜவுளிக் கடைகள், மின் சாதனப் பொருள் கடைகள், நகைக் கடைகள் அமைந்துள்ளன.

சிந்தாதரிப்பேட்டையில் அதிகளவில் ஜவுளி, நகைக் கடைகள் அமைந்துள்ளன. கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிடுகின்றனா்.

மேலும், ஜமுனாமரத்தூா் செல்லும் வாகனங்கள் இவ்வழியாகத்தான் செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும்போதும், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடும்போதும் விபத்துகள் நேரிடுகின்றன.

போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேலும், சிந்தாதரிப்பேட்டை பகுதியில் போக்குவரத்து காவலா்களை நிறுத்தி வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.