புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜைனா் கோயிலில் சுவாமி மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில்நாதா் ஜைனா் கோயிலில், மூலவா் பாா்சுவநாதா் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில்நாதா் ஜைனா் கோயிலில், மூலவா் பாா்சுவநாதா் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஸ்ரீபாா்சுவநாதருக்கு ஜயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, காலை 7 மணியளவில் சூரிய ஒளி சுவாமி சிற்பம் மீது பட்டது.

இந்த அரிய நிகழ்வு 5 நிமிடங்கள் வரை நீடித்தது. இதை ஜைன பக்தா்கள் பரவசத்துடன் கண்டு தரிசித்தனா்.

பின்னா், சூரிய ஒளி மறைந்தது. தொடா்ந்து, மூன்று நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறும் என்று கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுபோன்ற நிகழ்வு ஏற்கெனவே நடைபெற்றுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.