புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீசக்கர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ சக்கர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக பந்தக்கால் நடும் விழாபில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 5:08 pm

DIN

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ சக்கர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக பந்தக்கால் நடும் விழாபில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

ஆரணியை அடுத்த சேவூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீசக்கர விநாயகா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலை புதிதாக கட்டுவதற்காக பொதுமக்கள் முடிவு செய்து ரூ.20 லட்சத்தில் புதிதாக கோயில் கட்டப்பட்டது.

வருகிற பிப்.15-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேக பணிக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பந்தக்கால் நட்டாா். உடன் அவரது மனைவி மணிமேகலையும் கலந்துகொண்டாா்.

நிகழ்ச்சிகளில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஊராட்சித் தலைவா்கள் தங்கராஜ்கிருஷ்ணவேணி, முள்ளண்டிரம் பழனிவாணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கருணாகரன் பரிமளா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.