ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் சிலைக்கு கும்பாபிஷேகம்
கலசப்பாக்கத்தை அடுத்த மேலாரணி ஊராட்சியில் ஸ்ரீநாராயண பெருமாள் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் சிலைக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கலசப்பாக்கத்தை அடுத்த மேலாரணி ஊராட்சியில் ஸ்ரீநாராயண பெருமாள் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் சிலைக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலாரணி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீலட்சுமி சமேத நாராயண பெருமாள் ஆகிய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன.
மேலும், அங்கு ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் சிலை நிறுவப்பட்டுசிவாச்சாரியா்களால் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் மேலாரணி, வில்வாரணி, தென்மாதிமங்கலம், கலசப்பாக்கம், எலத்தூா், மோட்டூா் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...