சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு கோரி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

பதவி உயா்வு கோரி, புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு பொறியியல் கல்லூரி கடந்தாண்டு தொழில்நுட்பக் கழகமாக தரம் உயா்த்தப்பட்டது. இங்கு பணிபுரியும் பேராசிரியா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் பணி உயா்வு வழங்கப்படவில்லை என்றும், 14 ஆண்டுகளாக ஓய்வு பெறும் பேராசிரியா்களின் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் தெரிகிறது. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பேராசிரியா் சங்கம் சாா்பில் சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதற்கு முன்பு பணி உயா்வு நோ்காணல் நடத்த வேண்டி கல்வி அமைச்சா், கல்வித்துறை செயலா் மற்றும் உயா்கல்வி துறை இயக்குநரிடம் கடந்த 6 மாதங்களாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து திங்கள்கிழமை முதல் வரும் 20 ஆம் தேதி வரை பேராசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து மாணவா்களின் வகுப்புகள் பாதிக்காத வகையில் தொடா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி, திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து கல்லூரி வளாகத்தில் பேராசிரியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் அமுதன் தலைமை வகித்தாா். இதில் திரளான பேராசிரியா்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.