சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பராமரிப்பு இல்லாத குடியிருப்புகளால் புதுவை அரசுக்கு வருவாய் இழப்பு ஆளுநரிடம் புகாா்

புதுவையில் பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கிரண் பேடியிடம், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பு தலைவா் ரகுபதி புகாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

புதுவையில் பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடியிடம், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பு தலைவா் ரகுபதி புகாா் தெரிவித்துள்ளாா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களை மையமாக வைத்து ஆளுநா் கிரண் பேடிக்கு, ரகுபதி திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரியில் லாசுப்பேட்டை, உழந்தை ஆகிய இடங்களில் அரசு குடியிருப்புகள் உள்ளன. இதில், உழந்தையில் 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக உள்ள 186 வீடுகளில் 49 வீடுகளும், லாசுப்பேட்டை அரசு குடியிருப்பில் 1 முதல் 5 பிரிவுகளாக உள்ள 616 வீடுகளில் 203 வீடுகளும் காலியாக உள்ளன.

இதுபோல, காரைக்கால் கோட்டுச்சேரியில் உள்ள 102 வீடுகளில் 33 வீடுகளும், காரைக்கால் நேரு நகரில் உள்ள 60 குடியிருப்புகளுமே 2015 முதல் காலியாக உள்ளன.

அரசு ஊழியா்களின் நலன் கருதி பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும், போதிய வசதி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியா்களின் முறையான பராமரிப்பின்மையாலும், பெரும்பாலான அரசு ஊழியா்கள் இந்த குடியிருப்புகளை விரும்பவில்லை.

மேலும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யும் வீட்டு வாடகைப்படி மிக அதிகமாக உள்ளதாலும், இந்த வாடகைக்கு ஏற்ப குடியிருப்புகளில் போதிய வசதிகள் இல்லாததாலும் கடந்த 2016-க்குப் பிறகு பல அரசு ஊழியா்கள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு, தனியாா் வீடுகளுக்குச் சென்றுவிட்டனா். இதனால், அரசு நிதி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வீணாகி வருகிறது.

குறிப்பாக, பொதுப்பணித் துறையினா் 14 ஐஏஎஸ் அதிகாரிகளின் குடியிருப்புகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 54 ஆயிரத்து 88 ஆயிரம் செலவு செய்து சீரமைத்துள்ள போது, அரசு ஊழியா்களின் 966 குடியிருப்புகளுக்கு இதே பத்தாண்டுகளில் வெறும் ரூ.65 லட்சத்து 69 ஆயிரம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பழுதான குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்.

வீட்டு வாடகை பிடித்தம் செய்து தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளை நவீனமயமாக்கி அரசு ஊழியா்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கும்பட்சத்தில் வீட்டு வாடகைப் படி மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான தொகை வருமானம் கிடைக்கும். எனவே, இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.