கிழக்குமேடு கற்பக விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழைமை வாய்ந்த கற்பக விநாயகா் கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிந்தன.
இந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு, விநாயகா், லட்சுமி, சரஸ்வதி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தம்பதி பூஜை, கலசம் புறப்பாடுதலுடன் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு, செவரப்பூண்டி, நம்பேடு ராஜமாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று மாலை சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகா் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...