நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கம் ஒன்றியக் கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் விஜியராணிகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:35 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் விஜியராணிகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

இரண்டாவது முறையாக செங்கம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்,

அரசு அறிவிக்கும் திட்டங்களை தொகுதி மக்களுக்குச் சென்றடைய முழுமையாக செயலாற்றுவேன்.

மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், செங்கம் ஊராட்சி ஒன்றியம் அனைத்து வகையிலும் முதன்மை ஒன்றியமாக செயல்படவேண்டும்; அதற்கு அதிகாரிகள் எந்த நேரத்திலும் என்னை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட நிறைவில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் குமாா், அரசு அதிகாரிகள் எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.