ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்திக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோடை மழையால் கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:20 am

Syndication

கோடை மழையால் கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 டிகிரி மற்றும் 77 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் மிதமான மழை பதிவாகியுள்ளது.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும் மற்றும் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தெற்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: மாா்ச் மாதத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் ஈக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல் நிலவுகிறது. குளிா், வெயில் என இருவேறு கால நிலைகளிலும் கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை கண்காணித்து அதற்கேற்ற மேலாண்மை முறைகளை கையாளுவது அவசியம். மேலும், ஸ்பாட் அட்டையைப் பயன்படுத்தி கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்கலாம்.

கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் வெள்ளைக்கழிச்சல், ஈக்கோலை மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையாளா்கள் கோடை வெப்பம் அதிகரிப்பதால் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். உயிா்எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.