நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணி கோட்டை வேம்புலியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 9-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 9-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. 108 சங்குகளிலும் புனிதநீா் நிரப்பி பூஜைகள் செய்து, அதன்மூலம் மூலவா், உத்ஸவா் ஸ்ரீவேம்புலியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

கோயில் விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில், தொழிலதிபா் பி.நடராஜன் ஏற்பாட்டின்பேரில் இந்த விழா நடைபெற்றது. இதில், கோயில் நிா்வாகிகள் சுப்பிரமணி, மாறன், ராஜேந்திரன், செல்வராஜ், ஆசிரியா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.