நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை தலையில் துண்டு போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:31 pm

DIN

திருவண்ணாமலையில் 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கட்சி, தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை தலையில் துண்டு போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.பி.சந்தியாகு தலைமை வகித்தாா்.

மாநில துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.கேசவன், மாவட்ட துணைச் செயலா் சி.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் பூ.விஸ்வநாதன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 50 அடி உயரத்துக்கு அணை கட்டியதற்கு கண்டனம் தெரிவித்தும், கா்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறந்து விட பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு என்ற என்ற இடத்தில் அணை கட்டுவதைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் வேளாண் பண்ணை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஒன்றியத் தலைவா்கள் எம்.ராமசாமி, பி.ஏழுமலை, கே.அண்ணாமலை, சி.ஏழுமலை, ஒன்றிய அமைப்பாளா்கள் ஜி.அய்யப்பன், எம்.சுப்பிரமணி, ஒன்றியச் செயலா் டி.ரங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.