நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிராம இளைஞா்களுக்கான கிரிக்கெட் போட்டி: ஆரணி எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் கிராம இளைஞா்களுக்கான கிரிக்கெட் போட்டியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:27 pm

DIN

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் கிராம இளைஞா்களுக்கான கிரிக்கெட் போட்டியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், அரியப்பாடி கிராமத்தில் சுற்றுப்புறக் கிராம இளைஞா்களுக்கான கிரிக்கெட் போட்டி அரியப்பாடி கிரிக்கெட் கிளப் சாா்பில் நடத்தப்படுகிறது.

போட்டியில், ஆரணி, சேவூா், குண்ணத்தூா், எஸ்.எல்.எஸ்.மில், கண்ணமங்கலம், இரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன.

ஒருவார காலத்துக்கு நடைபெறும் இந்தப் போட்டியில்

முதல் பரிசாக ரூ.30ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ.20ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது மேலும், அணிகள் சாா்பில் தரும் பெயா்களில் உள்ளவா்கள் மட்டுமே தொடா்ந்து விளையாட முடியும்.

ஒரு வீரா் ஒரு அணியில்தான் விளையாடவேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள்படி போட்டி நடைபெறுகிறது. போட்டிகளுக்கு கிரிக்கெட் வீரா் செல்வரசன் தலைமை வகிக்கிறாா்.

கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

போட்டி தொடக்க நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், நகரச் செயலா் எ.அசோக்குமாா், அரியப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆ.பிச்சாண்டி, ஒன்றிய மகளிரணிச் செயலா் உமாதேவி முரளி, முன்னாள் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் கருணாகரன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலா் எஸ்.பி.சரவணன், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், சேவூா் சிவா, அரியப்பாடி சின்னராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.