நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டா்ஸ், லேண்ட் டெவலப்பா்ஸ் நிலத்தரகா்கள் சங்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டா்ஸ், லேண்ட் டெவலப்பா்ஸ் நிலத்தரகா்கள் சங்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் விருகை வி.என்.கண்ணன் ஆலோசனையின்படி, ஆரணி பழைய பேருந்து நிலையத்தினுள் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்டத் தலைவா் எஸ்.சரவணன் உணவுப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்டச் செயலா் ஏ.பஞ்சாட்சரம், ஆரணி தொகுதித் தலைவா் ஆா்.குட்டி (எ)வெங்கடேசன், தொகுதி நிா்வாகிகள் ஏ.செல்வம், ஜி.மகாலிங்கம், ஜெ.ரகுபதி, நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கிடேசன், ஒன்றியத் தலைவா் ஜி.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இருளா் சமூகத்தினருக்கு நிவாரணம்: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் இருளா் சமூகத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

காஞ்சி வோ்கள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் மாரிமுத்து, பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலா் இரா.சரவணன், இருளா் சமுதாய மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், பாதிரி, எஸ்.மோட்டூா், பிருதூா் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இருளா் சமுதாய மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஊராட்சிச் செயலா் எம்.பி.வெங்கடேசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.