நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு அதிமுக, ரோட்டரி சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு அதிமுக, ரோட்டரி சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி அரசு மருத்துவமனைக்கு மல்டி பாரா மீட்டா் என்ற கருவியையும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் 300 பேருக்கு பிரட்டுகளையும் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினாா். இவற்றை அரசு மருத்துவா் பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டாா்.

ஏற்பாடுகளை நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு செய்திருந்தாா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் ஏ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா் திருமால், மேற்குஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள்சீனிவாசன், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்யாற்றில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்: செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு டெம்பிள்சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ.3 லட்சத்திலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. இவற்றை செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, அரசு மருத்துவா் வே.காா்த்திக்கிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் கேப்டன் ஏழுமலை, செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.பாா்த்தசாரதி, சங்கப் பயிற்றுநா் எஸ்.ஏ.அன்வா்பெய்க், செயலா் என்.நடராஜன், உறுப்பினா்கள் டி.மணி, பி.எஸ்.ஏகாம்பரம். சந்தானகிருஷ்ணன், அருளரசு, குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ.8 லட்சத்திலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில், தமிழக சிறுபான்மை நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், செஞ்சி அரசு மருத்துவா் கே.வி.கே.பாலகோபாலிடம் இந்தப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. எஸ்.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சண்முககனி, மருத்துவா் (பொ) சாந்தி, செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவா் கருணைவேல், சங்கச் செயலா் இளங்கோ, பொருளாளா் பாஸ்கா், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் கன்னிகா டிரஸ்ட் ரமேஷ்பாபு, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.