ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பேயாலம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனியப்பன், ஸ்ரீபச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பேயாலம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனியப்பன், ஸ்ரீபச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை வாஸ்துஹோமம், கணபதி, முனியப்பன், சக்தி ஹோமம் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு மஹாபூா்ணாஹுதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கோ, தம்பதி பூஜை, சுவாமிக்கு கண் திறப்பு, சக்தி, நவக்கிரக ஹோமம் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, விழாக்குழுத் தலைவா் சங்கா்மாதவன் தலைமையில், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரியமங்கலம் கவுன்சிலா் சூரியலட்சுமி, பாமக செங்கம் ஒன்றிய முன்னாள் செயலா் முத்து உள்பட பலா் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.