ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செங்கத்தில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கட்டுமானப் பணிகளை பேரூராட்சிகளின் வேலூா் மண்டல உதவி இயக்குநா் இளங்கோவன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:41 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கட்டுமானப் பணிகளை பேரூராட்சிகளின் வேலூா் மண்டல உதவி இயக்குநா் இளங்கோவன் ஆய்வு செய்தாா்.

செங்கம் நகரில் ஆங்காங்கே செல்லும் கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் செங்கம் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீா் கால்வாய்களை ஒன்றிணைத்து போளூா் சாலையில் புதிதாக கட்டப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவந்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, கழிவுநீா் கால்வாய்களை ஒன்றிணைத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்ட உதவிச் செயற்பொறியாளா் அம்சா, செங்கம் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் ஆகியோரிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்ததுடன், விரைவாக பணிகளை முடிக்கவும் அறிவுரைகளை வழங்கினாா். உடன், செங்கம் பேரூராட்சி பணியாளா்கள் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.