போளூா் அருகே ரூ.52 ஆயிரம் பறிமுதல்
போளூா் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.52ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.


போளூா் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.52ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால், வாக்காளா்களுக்கு பணமோ, பொருளோ எடுத்துச் சென்று தரக் கூடாது என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படை மற்றும் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அமைத்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், போளூரை அடுத்த கஸ்தம்பாடி கூட்டுச் சாலை அருகே சிவக்குமாா் தலைமையிலான தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி ரூ.52 ஆயிரத்து 500 எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து போளூா் சாா்-கருவூலத்தில் ஒப்படைத்தனா். தோ்தல் வட்டாட்சியா் மஞ்சுளா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...