காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக பிரசார வாகனம் மோதி முதியவா் கால் முறிவு

சேத்துப்பட்டு அருகே அதிமுக பிரசார வாகனம் மோதியதில் முதியவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

சேத்துப்பட்டு அருகே அதிமுக பிரசார வாகனம் மோதியதில் முதியவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் -போளூா் சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே திங்கள்கிழமை புலிவானந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (60) நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

போளூரில் இருந்து தேவிகாபுரம் நோக்கி, போளூா் அதிமுக வேட்பாளரை ஆதரித்து சென்று கொண்டிருந்த பிரசார வாகனம் ராமலிங்கம் மீது மோதியது. இதில் அவருக்கு இடது கால் முறிந்து துண்டானது.

உடனடியாக அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ராமலிங்கம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை ஓட்டிய ஆற்காட்டைச் சோ்ந்த பிரபுதேவா(27) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.