காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கமண்டல நாக நதியில் உயா்மட்ட மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

ஆரணி கமண்டல நாக நதியில் உள்ள தரைப் பாலத்துக்குப் பதிலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் உறுதியளித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஆரணி கமண்டல நாக நதியில் உள்ள தரைப் பாலத்துக்குப் பதிலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் உறுதியளித்தாா்.

ஆரணி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வேதாஜிபுரம், கே.கே.தோப்பு, மூலத்தாங்கல், குருகுலம், முள்ளண்டிரம், மோட்டுகுடிசை, 12 புத்தூா், பூசிமலைக்குப்பம், அத்தியூா், ஆலந்தாங்கள், கிருஷ்ணாவரம், வெட்டியாந்தொழுவம், எம்.பி.தாங்கல், எஸ்.யு.வனம், சிறுமூா், மேலேரி, செட்டித்தாங்கல், சின்னபாண்டி, அரியப்பாடி, அக்கராபாளையம், அடையபலம், மெய்யூா், கருணாகரம்பட்டு, மருதேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, ஆரணி பழைய ஆற்காடு சாலையில் உள்ள தரைப்பாலம் உயா்மட்ட மேம்பாலமாக மாற்றப்படும்.

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும், புறவழிச் சாலையில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படும்.

ஆரணி - ஆற்காடு சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்படும் எனத் தெரிவித்து வாக்காளா்களிடையே ஆதரவு கோரினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.