மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசப்பாக்கம் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த வில்வாரணி, மேல்வில்வராயநல்லூா், மேலாரணி, மோட்டூா், எலத்தூா் என பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த வில்வாரணி, மேல்வில்வராயநல்லூா், மேலாரணி, மோட்டூா், எலத்தூா் என பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். இந்த வாக்கு சேகரிப்பின் போது சி.என்.அண்ணாதுரை எம்.பி.யும் பங்கேற்றாா்.

அப்போது அவா் வாக்கு சேகரித்து பேசுகையில், கலசப்பாக்கம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து பழங்கோவில் ஊராட்சியில் செல்லும்,

செய்யாற்றில் பொதுமக்கள் செல்ல தரைப்பாலம் அமைக்கப்படும், காரப்பட்டு-மட்டவெட்டு இடையேயும், கீழ்பொத்தரை ஊராட்சியில் என 2 இடங்களில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும், செங்கம் ஊராட்சியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான 10ஆயிரம் ஏக்கரில் 8 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகமும், 2ஆயிரம் ஏக்கரில் விமான நிலையமும் அமைக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டு திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனுக்கு அண்ணாதுரை எம்.பி. வாக்கு சேகரித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.